என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திரிபுரா அரசு அதிகாரிகள்
நீங்கள் தேடியது "திரிபுரா அரசு அதிகாரிகள்"
அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிய கூடாது என திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அகர்தலா:
திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்மை செயலாளர் சுஷில் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ``பொதுவாக அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின்போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
×

X